கொரானா அறிகுறிகள் எப்படி இருக்கும்?
கொரானா அறிகுறிகள் எப்படி இருக்கும்?
சாதாரண காய்ச்சல் போன்று வரும் இந்த வைரஸ் தொற்று மூன்று நாட்களுக்கு மேலும் குறையாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை காட்டிலும் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். அதனால் காய்ச்சலுக்கு சுயமாக மாத்திரைகள் எடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இந்த தொற்று பரவிய பிறகு 14 முதல் 20 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தெரிகிறது என்பதால் பரவுவதும் அதிகரித்துவருகிறது.
குழந்தைகளை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யணும்?
உடல் வெப்பத்தை காட்டிலும் அதிகமான வெப்பம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் வைரஸ் தொற்று பரிசோதனை தாமதிக்காமல் செய்ய வேண்டும். காய்ச்சல் தொற்று இருந்தால் இந்த நேரத்தில் சுய வைத்தியம் வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது மருத்துவத்துறை. தற்போது காய்ச்சலில் தொற்று என்பது 14 நாட்களுக்கு பிறகு இதன் அறிகுறி தென்படுவதாலும் 27 நாட்களுக்கு பிறகு தொற்று இருப்பது தெரியவருவதாலும் வேகமாக இந்த தொற்று பரவி வருவதை தடுக்க முடியாமல் போவதாக மருத்துவத்துறை கவலை தெரிவிக்கிறது. அதனால் சளி, இருமல் அறிகுறி இருந்தாலே தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.
கொரோனா வைரஸ் தாக்காமல் தப்பிக்க கைகளை இப்படித்தான் கழுவணுமாம்...
பொதுவாக காய்ச்சல் வந்தால் சளியும், இருமலும் உடன் வரும். அதனால் இவை உடல் சூடு அல்லது குளுமையால் தான் என்று முடிவெடுக்கவேண்டாம். தொடர் இருமலும், சளியும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சலின் போது இரு மலும், சளியும் இருப்பவர்கள் பொது இடங்களிலும் துப்ப வேண்டாம்.
வீட்டிலும் தனி கழிவறையையோ அல்லது உபயோகத்துக்கு பின்பு நீரை விட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளிக்கவோ வேண்டும். யாருடைய கைகளிலும் குலுக்க வேண்டாம். கைகளை கழுவாமல் முகத்தில் குறிப்பாக மூக்கு, கண் பகுதியில் துடைக்க வேண்டாம்.வீட்டில் இருப்பவர்களிடமிருந்து தனிமை படுத்தி கொள்ளுங்கள். தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள்.
வீட்டிலும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவது அனைவருக்கும் பாதுகாப்பா னது. தும்மல் வந்தால் கைகளை கொண்டு மூடி தும்முவதோடு உடனடியாக கைகளை சோப்பு நீர் கொண்டு சுத்தமாக கழுவுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும்போது கவனமாக கைகளை தேய்க்க வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கை களை சோப்பு கொண்டு கழுவுங்கள்
தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் இந்த அறிகுறிகளையும் கவனியுங்கள் காய்ச்சலோடு தொண்டை செருமல், தலைவலி, மூச்சுதிணறலும் உண்டாககூடும். எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளையும், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்த கர்ப்பிணிக ளையும், வயதானவர்களையும் எளிதில் தொற்றி பாதிப்பை உண்டாக்க கூடியது என்பதால் இவர்களை அதிக கவனமாக பார்த்துகொள்வது நல்லது.
கொரோனாவை எதிர்க்கும் 10 விதமான ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்காமல் குடியுங்கள்!
இதை தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்க ளுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதற்காக இந்த அறிகுறிகள் இருந்தாலே கொரோனா வைரஸ் நமக்குமா என்ற பயம் வேண்டாம். அதே நேரம் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவும் வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் முக்கிய அறிவுரை.
காய்ச்சல் என்று வந்தாலே திரவ உணவு எடுத்துகொள்ளுங்கள். கண்டிப்பாக ஓய்வும், போதுமான தூக்கமும் கண்டிப்பாக கடைபிடியுங்கள். இயன்றவரை சுய வைத்தியம் வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் இப்போதைய அறிவுரை. கண்டிப்பாக மருத்துவரது ஆலோசனையோடு தனிமை தான் இப்போதைக்கு அனைவருக்கும் பாதுகாப்பானது.